;
Athirady Tamil News

தென்மராட்சி பகுதிகளில் கையெழுத்துப் போராட்டம்

0

வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் பயங்கரவாத தடைச் சட்டங்களுக்கு எதிரான கையெழுத்துப் போராட்டம் தென்மராட்சிப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரியும், புதிதாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தை நிறுத்தக் கோரியுமே நடைபெறவுள்ள இந்த போராட்டம் தென்மராட்சிப் பிரதேசத்தின் கொடிகாமம் மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் இடம்பெற்றன.

இதில் சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோர், சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்கள் செ.மயூரன், கு.தினேஸ், பொதுமக்கள், வர்த்தகர்கள் பங்குகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.