;
Athirady Tamil News

வடக்கில் சிறந்த பேருந்து தரிப்பிடங்கள் கிடையாது – இளங்குமரன் எம்.பி

0
வடக்கு மாகாணத்தில் சிறந்த பேருந்து தரிப்பிடங்கள் இல்லை. அவ்வாறான நிலையில் தான் போக்குவரத்து தொடர்பிலான மானியத் திட்டங்களை அரசாங்கம் வழங்கி சிறந்ததொரு சேவையை வழங்கவுள்ளது என மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தி வரும் போக்குவரத்து மானியத் திட்டம் மற்றும் ஏனைய போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் தொடர்பான அறிவூட்டல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் போக்குவரத்து தொடர்பிலான மானியத் திட்டங்களை பெறுகின்றமை குறைவானதாகவே காணப்படுகின்றது.

இந்த நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும், இதற்காக இது தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் விழிப்பூட்டும் நோக்கில் இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலந்துரையாடல் ஊடாக இவ் விடயங்கள் அனைத்து தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும், இதற்காக அரசாங்கம் ரூபா 4,000 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது.வடக்கு மாகாணத்தில் சிறந்த பேருந்து தரிப்பிடங்கள் இல்லை பேருந்து சேவை நாட்டின் அத்தியாவசிய சேவை ஆகும் இது ஸ்தம்பிதமானால் அனைவருக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும்.

வடக்கு மாகாணத்தில் இவ்வாறான மானியத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதே எமது அரசாங்கத்தின் முக்கியமான நோக்கமாகும்.

இவை தொடர்பில் பூரண தெளிவுகளை வழங்கும் நோக்கில் கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன இவற்றை எமது எதிர்கால சந்ததிக்கு கொண்டு செல்ல வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.