;
Athirady Tamil News

உடனடியாக வெளியேறுங்கள் ; அமெரிக்க மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை

0

இஸ்ரேலில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா-ஈரான் இடையே அணுசக்தி விவகாரத்தில் நடைபெற்ற 3-ஆவது சுற்று மறைமுகப் பேச்சுவாா்த்தையில், இரு நாடுகளும் ஆக்கபூா்வமான மற்றும் நோ்மறையான கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதாக இந்த சமரச முயற்சியை முன்னெடுத்து வரும் ஓமன் வெளியுறவு அமைச்சா் பத்ர் அல்-புசைதி தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக, இருதரப்புக்கும் இடையேயான மோதல் போக்கு தணியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது தூதரகப் பணியாளர்களுக்கும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கும் இன்று வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், இஸ்ரேலிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா எந்நேரத்திலும் தாக்குதல்களைத் தொடுக்கலம் என்ற பதற்றமான சூழல் நிலவுவதைச் சுட்டிக்காட்டியே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இனி வரும் நாள்களில் இஸ்ரேலுக்கான விமான சேவையும் முடக்கப்படலாம் என்றும் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.