புதிய மேலங்கி அறிமுகம்
புதிய மேலங்கி அறிமுகம்
பாறுக் ஷிஹான்
மனிதநேயம் ஒற்றுமை மற்றும் சேவை உணர்வை உயர்த்திப் பேசும் புனித நோன்பு மாதத்தினை முன்னிட்டுஇ களப்பணிகளை மேலும் செயல்திறன் மிக்கதாகவும் உற்சாகமூட்டுவதாகவும் மாற்றும் நோக்கில் புதிய மேலங்கி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் தலைமையில் புதிய மேலங்கிகள் எமது அலுவலக உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் நோன்பு மாதத்தில் சமூக நல சேவைகளை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டது.
அத்துடன் நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்கள் வீதியோர கடைகள் விசேட பரிசோதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து இன்று மாலை கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகிலா இஸ்ஸதீனின் பணிப்புரைக்கமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் வழிகாட்டுதலின் கீழ் வீதியோர கடைகள் உணவகங்களில் விசேட சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
