;
Athirady Tamil News

சாய்ந்தமருது கல்யாண வீதி காபட் இடல் அங்குரார்ப்பண நிகழ்வு

0

1.5 கிலோ மீற்றர் நீளம் கொண்ட சாய்ந்தமருது கல்யாண வீதி  36.7 மில்லியன் நிதி செலவில்  பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும்  அரசியலமைப்பு பேரவை உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா  இன்றைய தினம் (07) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் , வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அக்கரைப்பற்று பிராந்திய பிரதம பொறியியாளர் ஏ.எம். உவைஸ்,  கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் இசட் ஏ.எம். அஸ்மி , வீதி அபிவிருத்தி அதிகார சபையின்  உத்தியோகத்தர்கள்,  பிரஜா சக்தியினுடைய தவிசாளர்கள் , தேசிய மக்கள் சக்தியின் பிரதேச செயற்பாட்டாளர்கள்,  பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.