;
Athirady Tamil News

டெல்லி கீழ் கோர்ட்டு நீதிபதி தூக்கு போட்டு தற்கொலை

0

புதுடெல்லி

டெல்லி கீழ் கோர்ட்டில் நீதிபதியாக இருப்பவர் அமன் குமார் சர்மா. 2018-ம் ஆண்டு புனேவில் உள்ள சட்ட பள்ளியில் இளநிலை சட்ட படிப்பை முடித்த அவர், 2021-ம் ஆண்டில் டெல்லி நீதி துறையில் தன்னை இணைத்து கொண்டார்.

அவருடைய பதவி காலத்தில் பல்வேறு குற்ற மற்றும் சிவில் வழக்குகளை கையாண்டுள்ளார். இந்நிலையில், தெற்கு டெல்லியில் சப்தர்ஜங் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து அவர் தற்கொலை செய்து கொண்டார்.

அவருக்கு வயது 30. அவர் மின்விசிறியில் தூக்கு போட்டுள்ளார். இதனை அவருடைய உறவினர் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சூழ்நிலைகளை உறுதி செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில், அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றே சந்தேகிக்கப்படுகிறது. எனினும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.