;
Athirady Tamil News

லங்கா ஐஓசி எரிபொருள் விலைகளிலும் மாற்றம்

0

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அண்மைய விலைத்திருத்தத்திற்கு இணையாக, லங்கா ஐஓசி நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளை மாற்றியமைக்கத் தீர்மானித்துள்ளது.

இதன்படி, சந்தையில் அதிகம் பயன்படுத்தப்படும் இரண்டு எரிபொருட்களின் விலைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாற்றப்பட்டுள்ளன.

ஒக்டேன் 92 மற்றும் ஒட்டோ டீசல் விலையும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைக்கு நிகராக மாற்றியமைக்கப்படவுள்ளது.

ஒக்டேன் 95 பெட்ரோல் மற்றும் சூப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் செய்வது குறித்து இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.