;
Athirady Tamil News

தனியார் காணியில் பச்சிளம் குழந்தையின் சடலம்; ஈவிரமற்ற செயலை செய்தது யார்?

0

மீகஸ்வேவ, பள்ளியகோடெல்லாவில் அமைந்துள்ள ஒரு தனியார் காணியில் பச்சிளம் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீகஸ்வேவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்ர், பெண் சிசு ஒன்றின் சடலத்தைக் கண்டெடுத்தனர்.

ஈவிரமற்ற செயலை செய்தது யார்?
முதற்கட்ட விசாரணைகளின்படி, அச்சடலம் கண்டெடுக்கப்படுவதற்கு சுமார் இரண்டு நாட்களுக்கு முன்னரே அக்குழந்தை உயிரிழந்திருக்கக்கூடும் எனத் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திலேயே நீதிவான் விசாரணை ஒன்று நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையைத் தொடர்ந்து, குழந்தையின் மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிவதற்காக, சடலத்தின் மீது பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

குழந்தையின் பெற்றோரை அடையாளம் காண்பதற்கும், குழந்தை கைவிடப்பட்டமைக்கான காரணங்களை வெளிக்கொணர்வதற்கும் மீகஸ்வேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.