;
Athirady Tamil News

அமெரிக்கா – ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார் – பாகிஸ்தான்

0

அமெரிக்கா – ஈரான் இடையேயான மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் தயாராகவும் பெருமையுடனும் உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) தெரிவித்துள்ளார்.

ஈரான், இஸ்ரேல் – அமெரிக்கா இடையே பிப். 28 ஆம் தேதி தொடங்கி கடந்த மூன்று வாரங்களாக போர் நடைபெற்று வருகின்றது. இதனால் எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற சிரமங்களை மக்கள் எதிர்கொள்கின்றனர். பல்வேறு நாடுகள் இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்து வருகின்றன.

இந்த நிலையில், மேற்கு ஆசியாவில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் மறைமுக முயற்சிகள் குறித்து ஊடகத்தில் செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து, பாகிஸ்தான் பிரதமர் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“மாகாணத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்காக மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை பாகிஸ்தான் வரவேற்பதோடு, முழுமையாக ஆதரிக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.