;
Athirady Tamil News

சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாக கூறி சென்றவரே இணுவிலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

0
சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாக கூறி சென்றவரே இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் , இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் சடலமாக மீட்கப்பட்டவர் சுதுமலை பகுதியை சேர்ந்த காசிப்பிள்ளை மதுருபாகன் (வயது 75) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த முதியவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி சென்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 

You might also like

Leave A Reply

Your email address will not be published.