;
Athirady Tamil News

உகாண்டா: பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 4 குழந்தைகள் பலி – அதிர்ச்சி சம்பவம்

0

கம்பாலா,

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா. இந்நாட்டின் தலைநகர் கம்பாலாவின் மஹிட்னி பகுதி ஆரம்பப்பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று குழந்தைகள் வழக்கம்போல் கல்வி பயின்றுகொண்டிருந்தனர்.

அப்போது அந்த பள்ளிக்குள் கத்தியுடன் நுழைந்த 34 வயது இளைஞர் பள்ளியில் இருந்த குழந்தைகளை சரமாரியாக தாக்கினான். இளைஞர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.