வீடொன்றில் அதிர்ச்சி சம்பவம்; ஆணும் பெண்ணும் சடலமாக மீட்பு
காலி – தெலிக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில், வெட்டுக்காயங்களுடன் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் உடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த மற்றொரு பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.