வங்கதேச கேஸ் லைட்டா் ஆலையில் தீ 5 போ் பலி
வங்கதேச தலைநகா் டாக்கா அருகேயுள்ள கேஸ் லைட்டா் தயாரிக்கும் தொழிற்சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா்.
தொழிற்சாலையில் இருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் காரணமாக, தீ மளமளவென அடுத்தடுத்த பகுதிகளுக்குப் பரவியது. தகவலறிந்து வந்த 7 தீயணைப்பு வாகனங்கள், பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தன.
பின்னா், தீயணைப்பு வீரா்களின் தேடுதல் பணியில் தொழிற்சாலைக்குள் இருந்து 5 பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டன. விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.