உள்நாட்டுச் சந்தையில் மரக்கறி விலையில் அதிரடி மாற்றம்!
உள்நாட்டுச் சந்தையில் இன்றைய தினம் மரக்கறிகளின் விலையில் ஏற்றத்தாழ்வு காணப்பட்டுள்ளது.
அதன்படி, நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கரட், தம்புள்ளையில் 250 ரூபாய்க்கும் கெப்பொட்டிபொலவில் 290 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
லீக்ஸ் ஒரு கிலோகிராம் நுவரெலியாவில் 180 ரூபாய்க்கும் தம்புள்ளை மற்றும் கெப்பொட்டிபொலவில் 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கோவா ஒரு கிலோ தம்புள்ளையில் 100 ரூபாய்க்கும் கெப்பொட்டிபொலவில் 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கறிமிளகாய் கெப்பொட்டிபொலவில் 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.