;
Athirady Tamil News

அமெரிக்காவை இனி நம்பக்கூடாது; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோபம்

0

ஈரான் போர் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் தங்களுக்கு உதவவில்லை என்று காட்டமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசி வருகிறார். இதனால் நேட்டா நாடுகள் கூட்டமைப்பில் இருந்து அமெரிக்க வெளியேறினாலும் வியப்பதற்கு இல்லை என்பதே சர்வதேச நோக்கர்கள் கருத்தாக உள்ளது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவை நம்பாமல் ஐரோப்பா தனி ராணுவத்தை உருவாக்கவேண்டும் என்று பேசியுள்ளார். இது தொடர்பாக ஜெலன்ஸ்கி கூறியதாவது:

அமெரிக்கா நம்மைக் காக்கும் என்ற நம்பிக்கையில் மட்டும் ஐரோப்பா இருக்க முடியாது. அமெரிக்கா வெளியேறினால், லிதுவேனியா அல்லது போலந்து மீது தாக்குதல் நடந்தால் யார் பதில் சொல்வார்கள். அமெரிக்காவின் நிலைப்பாடு மாறுகிறது. இனி ஐரோப்பா தனது சொந்தப் பாதுகாப்பிற்குத் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

அமெரிக்கா இல்லாமல் நேட்டோ என்னவாகப் போகிறது என்பதை நாம் இப்போதே யோசிக்க வேண்டும். அமெரிக்காவைப் பின்தொடரும் நாடாக மட்டுமே இல்லாமல், ஐரோப்பா ஒரு வலிமையான சக்தியாக தன்னைக் கட்டியெழுப்ப வேண்டும்.அமெரிக்கா நேட்டோவை விட்டு விலகப்போவதாகச் சொல்வது, புதினுக்குக் கொடுக்கப்படும் ஒரு பரிசு”இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.