ஆட் பதிவுத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
இலங்கை ஆட் பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை உட்பட பொது சேவைகள் நாளை (17) செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு இன்னும் சரிசெய்யப்படாமையே இதற்குக் காரணம் என ஆட் பதிவுத் திணைக்களம் கூறியுள்ளது.
சீரமைப்புப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், கணினி அமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக அன்றைய தினம் சேவைகள் வழங்கப்படமாட்டாது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.