நிலக்கரி விவகாரம்; விசாரணைக்கு விசேட குழு நியமனம்!
நிலக்கரியின் தரம் மற்றும் கொள்முதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணைக்குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற நீதியரசர் கிஹான் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், உறுப்பினர்களாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆதித்ய படபெந்திகே மற்றும் மேல் நீதிமன்ற நீதியரசர் சஞ்சீவ சோமரத்ன ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.