;
Athirady Tamil News

ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது அமெரிக்காவுடன் போரிட தயார் -கியூபா அதிபர் பேச்சு

0

ஹவானா,

ஈரான் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த சமயத்திலேயே அடுத்து கியூபாதான் என்று அடா வடியாக அறிவித்தார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். கியூபா மீது பொருளாதார தடைகளை விதித்திருப்பதுடன், ரஷியா மற்றும் சீனா நாடுகள் கியூபாவுக்கு ஆதரவாக எரிபொருள், மருந்து உள்ளிட்டவற்றை வழங்குவதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளது அமெரிக்கா.

இந்த நிலையில் கியூபா அதிபர் மிகுவல் தியாஸ் கானெல், அமெரிக்காவின் அத்துமீறலுக்கு பதிலளித்துள்ளார். அவர் கியூபா புரட்சியின் 65-வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில் திரளான மக்கள் மத்தியில் பேசினார். அப்போது, “இந்தத் தருணம் மிகவும் சவாலானது. 1961, ஏப்ரல் 16 அன்று நடந்தது போலவே, ராணுவ ஆக்கிரமிப்பு உள்பட கடுமையான அச்சுறுத்தல் களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க இது நம்மை மீண்டும் அழைக்கிறது.

நாங்கள் அதை (அமெரிக்க ஆக்கிரமிப்பை) விரும்பவில்லை. ஆனால் அதைத் தவிர்க்கத் தயாராவதும், அது தவிர்க்க முடியாததாகிவிட்டால், அதை முறியடிப்பதும் நமது கடமையாகும்,” என்று கூறியுள் ளார். இதன் மூலம் அவர் அமெரிக்காவை போரில் எதிர்கொள்ள தயாராக இருப்பது தெரியவந் துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.