;
Athirady Tamil News

தமிழ்நாட்டில் நிகழ்ந்த பயங்கர விபத்து: கேரளாவைச் சேர்ந்த 9 பேர் பலி

0

கேரளாவிலுள்ள அரசு பள்ளி ஒன்றில் பணியாற்றிவரும் ஆசிரியைகள் உட்பட 13 பேர் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா சென்ற நிலையில், அவர்கள் பயணித்த வேன் பயங்கர விபத்தொன்றை சந்தித்தது.

அந்த விபத்தில், அந்த வேனில் பயணித்த 9 பேர் உயிரிழந்துவிட்டார்கள்.

தமிழ்நாட்டில் நிகழ்ந்த பயங்கர விபத்து
கேரளாவிலுள்ள மலப்புரம் என்னுமிடத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பணியாற்றிவரும் ஆசிரியைகள் உட்பட 13 பேர் தமிழ்நாட்டிலுள்ள வால்பாறை என்னுமிடத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அந்த சாலை கொண்டை ஊசி வளைவுகள் பல கொண்ட பாதையாகும். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை, அந்த வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொண்டை ஊசி வளைவு ஒன்றில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் பாய்ந்து, கீழே உள்ள சாலை ஒன்றில் மோதி விழுந்துள்ளது.

வேன் மோதியதில் வேனிலிருந்தவர்கள் வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளார்கள்.

அந்த பயங்கர விபத்தில், வேனில் பயணித்தவர்களில் ஒரு குழந்தை உட்பட ஒன்பது பேர் உயிரிழக்க, நான்கு பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

விடயம் என்னவென்றால், அந்தப் பள்ளியில் பணி செய்த ஆசிரியைகளில் ஒருவர் தவிர்த்து அனைத்து ஆசிரியைகளும் பலியாகிவிட்டார்கள்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்று அவர்களுடைய சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அந்த கிராமமே அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்ந்துள்ளது.

கிராம மக்கள் அனைவரும், அந்தப் பள்ளி மாணவர்களும் கூடி உயிரிழந்த பள்ளி ஆசிரியைகள் முதலான ஒன்பது பேருக்கும் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, அவர்களுடைய உடல்கள், அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.