;
Athirady Tamil News

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி

0

மாஸ்கோ,

ஈரான் மீதான அமெரிக்காவின் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது.

இதனை கட்டுப்படுத்த ரஷிய எண்ணெய்க்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கக் கோரி இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தன. முன்னதாக, இனி தளர்வுகள் வழங்கப்படாது என்று கூறி வந்த அமெரிக்கா, தற்போது தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க நிதித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், “ஏப்ரல் 17-ந்தேதிக்கு முன்னதாகவே கப்பல்களில் ஏற்றப் பட்ட ரஷிய பெட்ரோலியப் பொருட்களை வாங்குவதற்கான தளர்வு அடுத்த மாதம் 16-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த திடீர் முடிவால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.