தமிழர் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அரங்கேறிய கொடூரம் ; 07 பேருக்கு நேர்ந்த கதி
ஆனைமடுவ, கரம்பாவே பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (18) நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வின் போது ஏற்பட்ட மோதலில் 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இரண்டு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த தகராறே இந்த மோதலுக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வாய்த்தர்க்கம்
சுமார் 20 பேருக்கு இடையில் ஏற்பட்ட கடும் வாய்த்தர்க்கம் பின்னர் கைக்களப்பாக மாறியதில் 07 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக ஆனைமடுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சை பெற்று வரும் எவரும் கவலைக்கிடமான நிலையில் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆனைமடுவ பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும், நேரில் பார்த்த சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன.
மோதலைத் தூண்டிய பிரதான சந்தேகநபர்களை அடையாளம் காணவும், மோதலுக்கான துல்லியமான காரணத்தை கண்டறியவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.