;
Athirady Tamil News

அம்பாறை பொலிஸ் தலைமையக பக்மஹா திருவிழா

0

தமிழ் சிங்கள புதுவருட தினத்தினை முன்னிட்டு அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் குடும்பத்தினருக்காக நடத்தப்பட்ட பக்மஹா திருவிழா அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல மற்றும் இலங்கை இராணுவத்தின் 24 வது டிவிஷனின் தளபதி மேஜர் ஜெனரல் திலுபா பண்டார ஆகியோரின் அனுசரணையில் அம்பாறை பொலிஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த வருடாந்த திருவிழா பல்வேறு கிராமிய விளையாட்டுகளுடன் நடைபெற்றதுடன் அம்பாறை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உபுல் இந்திரஜித் குணவர்தன மற்றும் சக பொலிஸ் அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன் போது இத் திருவிழாவில் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளும் அரங்கேறியமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.