;
Athirady Tamil News

வித்தியாசமாக காதலை தெரிவிப்பதாக கூறி காதலி காதலனுக்கு அரங்கேற்றிய கொடூரம் ; வீடியோவில் காத்திருந்த அதிர்ச்சி

0

இந்தியாவில் தொலைத்தொடர்பு கடை ஒன்றில் பணிபுரியும் பெண், தனது காதலனை வீட்டிற்கு வரவழைத்து, வித்தியாசமாக ப்ரோபோஸ் செய்கிறேன் என்று கூறி, அவரது கண்களை கட்டி, நாற்காலியில் கட்டிப்போட்டு, பின்னர் தீ வைத்து எரித்து கொன்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தன்னை ‘புறக்கணித்ததால்’ அந்த நபர் மீது கோபமடைந்த பெண், குறித்த இளைஞன் இறப்பதை கேமராவில் பதிவுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருமணம்
27 வயதான காதலர்கள் இருவரும் கடையில் சக ஊழியர்களாக பணிபுரிந்து வந்தனர். இருவரும் ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர்.

இருப்பினும், சமீபகாலமாக காதலன் தனக்கு போதுமான கவனம் செலுத்தவில்லை என்றும், தன்னை திருமணம் செய்துகொள்ள மாட்டார் எனவும் தவறாக புரிந்துக்கொண்ட அவரை கொலை செய்ய நினைத்துள்ளார்.

வீட்டில் தனியாக இருந்தபோது காதலனை அழைத்து இருவரும் சிறிது நேரத்தின் பின்னர் அந்தப் பெண், கண்களையும் கை கால்களையும் கட்டி, ​​”வெளிநாடுகளில் பிரபலமாகி வரும்” ஒரு முறையில் அவருக்கு தன் காதலை தெரிவிக்க விரும்புவதாக காதலி கூறியுள்ளார்.

கைகள் கட்டப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட நிலையில் கிரண் அந்த திருமண ப்ரோபோசலுக்காகக் காத்திருந்தபோது, ​​காதலி தான் முன்னரே ஏற்பாடு செய்திருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய திரவத்தை ஊற்றி, பின்னர் தீ வைத்துள்ளாதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.