தென்கொரியாவில் சாம்சங் ஊழியர்கள் போராட்டம்: 18 நாள் வேலைநிறுத்த எச்சரிக்கை
சியோல்,
தென்கொரியாவில் 40 ஆயிரம் சாம்சங் நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு, போனஸ் கேட்டு 18 நாள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியால் சாம்சங் நிறுவனம் தற்போது இமாலய லாபத்தை அள்ளி வருகிறது. குறிப்பாக, கடந்த மார்ச் வரையிலான காலாண்டில் மட்டும் சுமார் ரூ.3.2 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.