கடையுடன் முழுமையாக எரிந்து கருகிய வீடு ; தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்
மொரட்டுவை – காலி வீதியின் கொரலவெல்ல பகுதியில் அமைந்துள்ள தச்சுப்பட்டறை ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டறையும், அருகிலிருந்த வீடொன்றும் முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளன.
மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பொலிஸாரின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த விபத்தில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என எகொடஉயன பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும், தச்சுப்பட்டறையிலிருந்த உபகரணங்கள் மற்றும் அருகிலிருந்த வீடு என்பன தீயினால் முழுமையாகச் சேதமடைந்துள்ளன.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. எகொடஉயன பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.