;
Athirady Tamil News

டிரம்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு 10 நிமிடத்திற்கு முன்பு தாக்குதல்தாரி குடும்பத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல்

0

வெள்ளை மாளிகை இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய தாக்குதல்தாரி சம்பவத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாக தனது குடும்பத்தினருக்கு மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

வெள்ளை மாளிகை இரவு விருந்தில் தாக்குதல்
அமெரிக்காவின் வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற வெள்ளை மாளிகையில் இரவு விருந்து நிகழ்ச்சியில் 31 வயது கலிபோர்னியா ஆசிரியர் கோல் ஆலன் என்ற நபர் திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினார்.

இந்த இரவு விருந்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அவரது மனைவி மெலினா டிரம்ப் உட்பட 2500 முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற நிலையில் இந்த தாக்குதல் சம்பவமானது அரங்கேறியுள்ளது.

சந்தேக நபரான கோல் ஆலன் விருந்து ஆரம்பிக்கும் முன்பே அதற்கு ஹோட்டலுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்துள்ளார் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு கோல் தாமஸ் ஆலன் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கோல் ஆலனின் மிரட்டல் அறிக்கை
அந்த அறிக்கையில் கோல் தாமஸ் ஆலன் தன்னை “coldForce” மற்றும் “Friendly Federal Assassin” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் டிரம்ப் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகளின் பெயர்களை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கோல் ஆலன், அவர்களை தாக்குவதே தன்னுடைய முதன்மை நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் டிரம்பை குறிப்பிட்டு, ஒரு துரோகி மற்றும் குற்றவாளியின் செயல்களால் தன்னுடைய கை கரைபடிவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று எழுதியுள்ளார்.

தன்னுடைய இந்த செயலை தவறாக கருதாமல், அநீதிக்கு எதிரான தார்மூக கடமை என கோல் ஆலன் தன்னுடைய அறிக்கையில் சித்தரித்துள்ளார்.

பாதுகாப்பு குறைப்பாடுகள் குறித்து சுட்டிக்காட்டிய கோல் ஆலன், நிகழ்ச்சி நடைபெறும் ஹோட்டலில் ஏற்கனவே தங்கியிருந்தால், அதிகாரிகளின் எந்தவொரு சோதனையும் இன்றி ஆயுதங்களை உள்ளே கொண்டு செல்ல முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் ஒரு வெளிநாட்டு பிரதிநிதியாக இருந்தால் M2 பிரவுனிங் இயந்திர துப்பாக்கியை கூட தனால் ஹோட்டல் அறைக்குள் கொண்டு செல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை தொடர்பாக ஆலனின் சகோதரர் கனெக்டிகட் காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்ததை அடுத்து மிக மோசமான சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.