;
Athirady Tamil News

அருச்சுனா எம்.பி தாக்கினார் என இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

0
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தனது கைத்துப்பாக்கியை காட்டி தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக ஒரு தரப்பினர் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்
பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கும் , மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் காணி பிணக்கு ஒன்று நிலவி வரும் நிலையில் , கடந்த சனிக்கிழமை குறித்த காணிக்குள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றைய தரப்பினரும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை காட்டி மற்றைய தரப்பினரை மிரட்டி இருந்தார்.

இது தொடர்பில் மற்றைய தரப்பினர் , மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் தாக்குதலுக்கு இலக்கானதாக இளைஞன் ஒருவர் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன மற்றும் மற்றைய தரப்பினை சேர்ந்த பெண்ணொருவரும் நாளைய தினம் புதன்கிழமை வரையில் மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.