;
Athirady Tamil News

இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் பிரைட் ரைஸ், பிரியாணி விலைகள்!

0

நாட்டில் பிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசிகுரான் ஆகியவற்றின் விலையை இன்று (07) நள்ளிரவு முதல் ரூ. 25 உயர்த்த முடிவு செய்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தி நடத்தப்படும் சிற்றுண்டிச்சாலைகளில் சாதாரண தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தும் சிற்றுண்டிச்சாலைகளில் ஒரு சாதாரண தேநீரின் விலை 5 ரூபாவினாலும், பால் தேநீரின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிற்றுண்டி வகைகளின் விலைகள் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், முட்டை ரொட்டி மற்றும் பராட்டாக்களின் விலைகளில் மாற்றம் இல்லை என ஹர்ஷன ருக்ஷான் மேலும் வலியுறுத்தியுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.