பலத்த பாதுகாப்புடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் ; முக்கிய கோப்புகளில் கையெழுத்து
தமிழ்நாட்டு முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்றார். முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதை தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சராக பதவியேற்றதன் பின்னர் கான்வாய் வாகனங்களுடன் பாதுகாப்பாக சென்று தலைமைக் காரியாலத்துக்கு சென்றுள்ளார்.
பொலிஸ் அணிவகுப்பு மரியாதை
முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்தை அடைந்ததும் பொலிஸ் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கண்டார்.
இதனை தொடர்ந்து, அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் முதலமைச்சர் விஜயை வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்புக்கான கோப்புகளில் கையெழுத்து இட்டார்.
மேலும் நாளை புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.