அரச அதிகாரிகளுக்கு விசேட அறிவிப்பு ; சொத்து அறிக்கை சமர்ப்பிப்புக்கு புதிய திகதி அறிவிப்பு
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கைகளை நிகழ்நிலை (Online) மூலம் பதிவேற்ற முடியாமல் போன அரச அதிகாரிகளுக்கு புதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஜூலை 7 ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர், எவ்வித அபராதமும் இன்றி குறித்த ஆவணங்களைப் பதிவேற்ற முடியும் என கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தொழில்நுட்ப காரணங்களால் இன்று (30) வரை ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியாதவர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு இந்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.