;
Athirady Tamil News

முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றதை கொண்டாடிய நியூசிலாந்து வாழ் தமிழர்கள்

0

கிரிஸ்டர்ச்,

தமிழக முதல்-அமைச்சராக விஜய் இன்று பதவியேற்றதை தமிழகம் மட்டுமின்றி கண்டங்கள் கடந்தும் அவருடைய ரசிகர்களும், ஆதரவாளர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில், தீவு நாடான நியூசிலாந்தின் கிறைஸ்ட் சர்ச்சில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழக வெற்றிக் கழக கொடியுடன் திரண்ட விஜய் ரசிகர்கள் கேக் வெட்டியும், இனிப்புகளை பரிமாறியும், ஒருவருக்கொருவர் ஆரத்தழுவியும் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

இதில், நியூசிலாந்து வாழ் தமிழர்கள் பலர் கலந்துகொண்டனர். விஜய் பதவி ஏற்கும் நிகழ்ச்சியும் அங்கு அகன்ற திரையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதையொட்டி கொண்டாட்டம் நடைபெற்ற அந்த ஓட்டலின் உரிமையாளர் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.