இன்று முதல் மின்சாரக் கட்டணத் திருத்தம் அமுல்
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (மே 11) முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பால் மின் உற்பத்திச் செலவு உயர்ந்துள்ள போதிலும், அரசாங்கத்தின் விசேட மானியத்தால் பெரும்பாலான நுகர்வோர் பாதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் 15 பில்லியன் ரூபா மானியம்
மின்சாரக் கட்டண அதிகரிப்பினால் நுகர்வோர் பெரும் சிரமங்களுக்கு உள்ளாவதைத் தடுக்க, அரசாங்கம் 15 பில்லியன் ரூபா மானியத்தை வழங்க உடன்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாட்டின் 95 சதவீத மின் நுகர்வோருக்கு இந்த கட்டண அதிகரிப்பு பொருந்தாது. குறிப்பாக, வீட்டுப் பிரிவில் 0 முதல் 180 அலகுகள் வரை மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கு எந்தவிதக் கட்டண அதிகரிப்பும் கிடையாது.
அதேவேளை 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கான கட்டணங்கள் பின்வருமாறு,
210 அலகுகள்- இதுவரை இருந்த ரூ. 9,570 கட்டணம், ரூ. 1,760 ஆல் அதிகரிக்கப்பட்டு ரூ. 11,330 ஆக மாறும்.
240 அலகுகள்- இதுவரை இருந்த ரூ. 12,120 கட்டணம், ரூ. 2,210 ஆல் அதிகரிக்கப்பட்டு ரூ. 14,330 ஆக மாறும்.
270 அலகுகள்- இவர்களுக்கான கட்டணம் ரூ. 2,660 ஆல் அதிகரிக்கும்.
300 அலகுகள் – இவர்களுக்கான மாதாந்தக் கட்டணம் ரூ. 3,110 ஆல் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.