;
Athirady Tamil News

பாழடைந்த வீடு ஒன்றிற்கு அருகில் இருந்து இரு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

0

மாத்தளை, கட்டுதெனிய பிரதேசத்தில் வசித்து வந்த 52 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வாக்குவாதம்
கட்டுதெனிய பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றிற்கு அருகில் நேற்று (13) இரவு உயிரிழந்த நபருக்கும் அவரது நண்பர்கள் சிலருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஏற்பட்ட மோதலில் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர்

சம்பவம் தொடர்பாக, குறித்த மோதல் இடம்பெற்றதாகக் கருதப்படும் வீட்டின் காவலாளி மற்றும் மற்றொரு நபர் கண்டி பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸ் குற்றப்பிரிவினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், மாத்தளை நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.