;
Athirady Tamil News

அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாள் WFH – இந்திய மாநிலமொன்று அறிவிப்பு

0

அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாள் WFH போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய மாநிலமொன்று அறிவித்துள்ளது.

மோடி வழங்கிய பரிந்துரைகள்
ஈரான் போர் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், இந்திய பிரதமர் மோடி பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை வலியுறுத்தினார்.

ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரிய(WFH) முன்னுரிமை வழங்க வேண்டும், இணையவழி வகுப்புகளை ஏற்பாடு செய்வதற்கு சில பள்ளிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மோடியின் WFH பரிந்துரையை பரிசீலிப்பதாக ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

டெல்லி அரசு கட்டுப்பாடு
இந்நிலையில், மோடியின் பரிந்துரையை ஏற்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.

இதன்படி, அரசு ஊழியர்கள் வாரத்திற்கு 2 நாட்கள் வீட்டில் இருந்து பணி புரிய வேண்டும்.

தனி வாகனங்களை தவிர்த்து, அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் திங்கட்கிழமை மெட்ரோ ரயிலில் பயணிக்க வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வகுப்புகளை இணைய வழியில் நடத்த ஊக்குவிக்கப்படும்.

அடுத்த ஒரு ஆண்டுக்கு டெல்லி அமைச்சர்கள், அதிகாரிகள் அலுவலகரீதியான வெளிநாட்டு பயணம் செல்ல மாட்டார்கள்.

அதிகாரிகளுக்கான பெட்ரோல் படி 200-250 லிட்டரில் இருந்து 160-200 ஆக குறைக்கப்படுகிறது. அடுத்த 6 மாதங்களுக்கு புதிய வாகனங்கள் எதுவும் அரசால் வாங்கப்படாது.

டெல்லி அரசில் 3 மாதங்களுக்கு பெரிய நிகழ்ச்சிகள் கிடையாது. அரசின் 50% ஆலோசனைக் கூட்டங்கள் இணைய வழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் இது போன்ற கட்டுப்பாடுகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.