எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோலை ஊற்றி பரபரப்பை ஏற்படுத்திய நபர்
எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று ஹோமாகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் எரிபொருள் நிரப்ப வந்த நபர் ஒருவர், திடீரென தனது மோட்டார் சைக்கிள் மீதும், தனது உடல் மற்றும் தலை மீதும் பெட்ரோலை ஊற்றிக்கொண்டுள்ளார். இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் தத்ரூபமாகப் பதிவாகியுள்ளது.
தவிர்க்கப்பட்ட பெரும் விபரீதம்
அந்த நபர் தன்னைத்தானே தீயிட்டு தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அந்த நபர் பெட்ரோலை ஊற்றிக்கொண்டதைக் கண்ட எரிபொருள் நிலைய ஊழியர்கள், மின்னல் வேகத்தில் செயற்பட்டு அவரைத் தடுத்துக் கட்டுப்படுத்தினர்.
இதனால் ஏற்படவிருந்த து. சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ஹோமாகம பொலிஸார், உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து சம்பந்தப்பட்ட நபரைத் தடுத்துக் காவலில் எடுத்தனர்.
அத்துடன் அவரது மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.