;
Athirady Tamil News

மானிப்பாயில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் – அஞ்சலிக்கு தயாராகும் தமிழர் தாயகம்

0

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு மானிப்பாய் பொதுச்சந்தை வளாகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.

நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன், பிரதேச சபை உறுப்பினர்கள் இறுதி யுத்தத்தின் போது வன்னியில் அவலங்களை சுமந்த மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்கி வைத்தனர்.
அதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மே 18ஆம் திகதி ஆகிய நாளை மறுதினம் திங்கட்கிழமை தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.