;
Athirady Tamil News

யாழில் பச்சிளம் குழந்தை பரிதாப மரணம்

0

யாழில் பிறந்து ஒன்றரை மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கீரிமலை – நல்லிணக்கபுரம் பகுதியில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாயொருவருக்கு 23.03.2026 அன்று இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் ஒரு பெண் குழந்தைக்கு நேற்றையதினம் தாயார் பால் கரைத்து ஊட்டியுள்ளார். பாலை குடித்த குழந்தை சிறிது நேரத்தில் அசைவின்றி காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் குழந்தையை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.