;
Athirady Tamil News

ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்!

0

ஹோர்முஸ் நீரிணை வழியாக எதிரி நாடுகளின் ராணுவ உபகரணங்களை எடுத்துச் செல்வதற்கு மீண்டும் அனுமதி அளிக்க முடியாது என ஈரான் முதல் துணை அதிபர் முகம்மது ரேசா ஆரிஃப் நேற்று (மே 17) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது:

”ஹோர்முஸ் நீரிணையில் எங்கள் உரிமையை இறையாண்மையை விட்டுக்கொடுத்திருந்தோம். எங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் எதிரி நாட்டு ராணுவ உபகரணங்களை எடுத்துச் செல்ல அனுமதி அளித்திருந்தோம். மீண்டும் அதனை எங்களால் அனுமதிக்க முடியாது” எனக் குறிப்பிட்டார்.

ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புக் குழு தலைவர் இப்ராஹிம் அஸிஸ், ஹோர்முஸ் நீரிணை வழியாக கடல்சார் போக்குவரத்தை சீராக கண்காணிக்க தொழில்முறை வழிமுறையை வகுக்கப்பட்டுள்ளதாக சனிக்கிழமை (நேற்று) கூறியிருந்தார். இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

சர்வதேச வணிகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் ஈரானின் தேசிய இறையாண்மை கட்டமைப்புக்கு உட்பட்டும் இதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இப்ராஹிம் அஸிம் பகிர்ந்துள்ளார்.

இஸ்ரேல், அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் தேசிய பாதுகாப்புக் குழு ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்துக்கான வழிமுறைகளை வகுக்கவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.