;
Athirady Tamil News

ஆடுகளை அடைக்க சென்ற இளைஞனுக்கு நடந்த துயரம் ; தமிழர் பகுதியில் சம்பவம்

0

மன்னார் பகுதியில் தனது ஆடுகளைப் பட்டியில் அடைக்கச் சென்ற இளைஞர் ஒருவர், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மன்னார், கள்ளிக்கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தீவிர விசாரணை
குறித்த இளைஞர், சனிக்கிழமை (16) அன்று வீட்டில் இருந்து ஆட்டுப்பட்டி இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றுள்ளார்.

அப்போது அப்பகுதியில் கடும் மழை பெய்துள்ளது. இந்த நிலையில், அவர் ஆட்டுப்பட்டிக்கு அருகில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞருக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்படும் எனக் கூறப்படும் நிலையில், சனிக்கிழமையும் அவருக்கு வலிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

இதன் காரணமாகவே, அவர் அங்கு தேங்கிக் கிடந்த மழைநீரில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இவ்விபத்து மற்றும் மரணம் குறித்துப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன

You might also like

Leave A Reply

Your email address will not be published.