;
Athirady Tamil News

சுவீடன் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

0

கோதன்பர்க்

ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நெதர்லாந்து நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றார். இந்த பயணத்தின்போது, இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு உள்ளன. அவருடைய பயணம் இன்று நிறைவடைந்தது.

இதுபற்றி அவர் வெளியிட்ட செய்தியில், என்னுடைய நெதர்லாந்து நாட்டுக்கான பயணம் இரு நாடுகளுக்கான உறவில் புதிய உத்வேகம் ஏற்படுத்தி உள்ளது.

நம்முடைய உறவை மூலோபாய நட்புறவாக அது உயர்த்தி உள்ளதுடன், நீர்வளம், அரை கடத்திகள், புதிய கண்டுபிடிப்பு, பாதுகாப்பு, நீடித்த சுற்றுச்சூழலுக்கு ஏற்ற போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுப்படுத்தி உள்ளோம்.

வருங்காலத்திற்கான உயர்ந்த இலக்கை கொண்ட செயல்திட்டம் ஒன்றையும் வகுத்துள்ளோம் என்று தன்னுடைய நெதர்லாந்து பயணம் பற்றி குறிப்பிட்டு உள்ளார். பிரதமர் மோடியின் இந்த பயணத்தின்போது, பிரசித்தி பெற்ற ஆனைமங்களம் தாமிர தகடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

இதனையடுத்து அவர் சுவீடன் நாட்டுக்கு புறப்பட்டார். அந்நாட்டின் கோதன்பர்க் நகரை சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை அந்நாட்டு அரசியல் மற்றும் வணிக தலைவர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் ஆர்வத்துடன் வரவேற்றனர்.

இந்த பயணத்தில், சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் மற்றும் பிற ஐரோப்பிய தலைவர்களையும், சுவீடனின் தலைமை செயலதிகாரிகளையும் சந்தித்து, வர்த்தகம், முதலீட்டை வலுப்படுத்தவும் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்புடன் செயல்படுவது பற்றியும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளார்.

இதுதவிர செயற்கை நுண்ணறிவு, பசுமை போக்குவரத்து, நவீன உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஆலோசனைகளில் ஈடுபட உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.