;
Athirady Tamil News

காங்கோவில் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு

0

கின்ஷாசா,

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கொடிய ‘எபோலா’ வைரஸ் நோய் மீண்டும் மிக அதிவேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. அங்குள்ள இதூரி மாகாணத்தில் கடந்த சில வாரங்களாகப் பரவி வரும் இந்த எபோலா வைரஸ் நோய்க்கு இதுவரை ஒட்டுமொத்தமாக 65 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

246 பேருக்கு தீவிர பாதிப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர். தற்போது மேலும் 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் காங் கோவில் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்தது.

எபோலா தொற்று என்பது உடல் திரவங்கள் வழியாக மனிதா்களிடையே மிக வேகமாகப் பரவக்கூடிய ஒரு கொடிய நோயாகும். சிகிச்சை அளிக்கத் தவறினால், உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது.

ஆனால், தொற்றுக் கண்டறியப்பட்டுள்ள நாட்டின் கிழக்குப்பகுதியில் கிளா்ச்சிக் குழுக்களின் ஆதிக்கம் மற்றும் உள்நாட்டுப் போா் நிலவி வருவதால், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துவக் குழுவினா் சென்று தடுப்பூசி மற்றும் சிகிச்சைகளை வழங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும், புவியியல் ரீதியாக இந்த மாகாணம் உகாண்டா, தெற்கு சூடான் நாடுகளின் எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ளதால், தொற்று எல்லை தாண்டிப் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.