;
Athirady Tamil News

பொலிஸாரின் பிடியில் தப்பிய பின்னர் சுடப்பட்டு பிடிபட்ட சந்தேக நபர் தொடர்பில் விசாரணை

0

video link-

https://wetransfer.com/downloads/6b475e6d0b6813900b3035bef067e9c620260518045612/07b8af?t_exp=1779339372&t_lsid=58a57020-3732-4adc-9bb3-36a861b68412&t_network=link&t_rid=ZW1haWx8Njc0OTRkNDZiNjM1NTFjNmY2NTg4ZTRi&t_s=download_link&t_ts=1779080172

https://wetransfer.com/downloads/d2bd9ebd8ff9c5e7a9af9dd9dd8e798520260518083724/6aa3a6?t_exp=1779352644&t_lsid=58a57020-3732-4adc-9bb3-36a861b68412&t_network=link&t_rid=ZW1haWx8Njc0OTRkNDZiNjM1NTFjNmY2NTg4ZTRi&t_s=download_link&t_ts=1779093444

பொலிஸாரின் பிடியில்  இருந்து தப்பிய பின்னர் சுடப்பட்டு கைதான  சந்தேக நபர் தொடர்பில் அம்பாறை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அம்பாறை பொது வைத்தியசாலையில்  வைத்து திங்கட்கிழமை (18)  அதிகாலை பொலிஸாரின்  பிடியில் இருந்து தப்பிய சந்தேக நபர் பின்னர் பொலிஸாரினால் சுடப்பட்டு   கைது செய்யப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையில்  கடும் பாதுகாப்பில் தற்போது  சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சந்தேக நபர் அம்பாறை மாவட்டம் புறநகர் பகுதியான   கொட்டவேஹெரா கிராமத்தில் சட்டவிரோத மதுபான  விற்பனையில் ஈடுபட்ட நிலையில்  ஞாயிற்றுக்கிழமை(17) இரவு  அம்பாறை முகாம் விசேட  அதிரடிப்படை அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டு  நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அம்பாறை தலைமையக போலீசாரிடம்  ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில்  அம்பாறை  தலைமையக பொலிஸார் சந்தேக நபரை   திங்கட்கிழமை (18)  அம்பாறை  வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக  மருத்துவரிடம் அழைத்து சென்ற நிலையில் குறித்த சந்தேக நபர் பொலிஸாரின்  பிடியில் இருந்து தப்பி  சென்றிருந்தார்.

இந்நிலையில் தப்பி சென்ற குறித்த சந்தேக நபரை   பின்தொடர்ந்த பொலிஸார்  பின்னர்  சந்தேக நபரை கடும் பிரயத்தனம் கொண்டு துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து கைது செய்தனர்.

இதன் போது பொலிஸாரின்   கையில் இருந்த துப்பாக்கியைப் பறிக்க முயன்ற  சந்தேக நபரை   அதே துப்பாக்கியினால்  தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக   பொலிஸாரினால் சுடப்பட்டார்.

இதன் போது சந்தேக நபரின் தொடைப் பகுதியில் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டு  பொலிஸார் சந்தேக நபரை  கைது செய்த பின்னர்  அம்பாறை பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தற்போது சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய குறித்த சந்தேக நபரின்   பாதுகாப்பை உறுதி செய்த பொலிஸார் கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய   அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்லவின்  உத்தரவிற்கமைய   அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்திலில் அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்  1 சம்பத் விக்ரமரத்னவின் மேற்பார்வையில் மேற்பார்வையின் கீழ்  அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பொறுபப்திகாரி  பி.பி. கஸ்தூரி ஆராச்சி தலைமையில்  மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.