;
Athirady Tamil News

இணையத்தை ஆக்கிரமித்துள்ள கரப்பான்பூச்சி ஜனதா கட்சி; வெகுண்டெழுந்த இளைஞர்கள்!!

0

இணையத்தில், கடந்த சில நாட்களாக ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்கிற கட்சி ஒன்று ஆக்கிரமித்துள்ளமை பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை, பாரதிய ஜனதா கட்சி, ராஷ்ட்ரிய் ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் என பல்வேறு ஜனதா கட்சிகள் இருக்கின்றன.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி
இவற்றிற்கு டஃப் கொடுக்கும் வகையில், இன்னொரு கட்சியும் உருவாகி இருக்கிறது. அந்த கட்சியின் பெயர்தான் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி.

இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், சமீபத்தில் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தினை தெரிவித்ததாக ஒரு தகவல் வெளியானது.

அவர், “வேலையில்லாத சில இளைஞர்கள், சமூக ஆர்வார்கள் போல செயல்பட்டு கரப்பான்பூச்சி போல அமைப்பை தாக்குவதாக அவர் கூறுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை தான் கூறவில்லை என்று அவர் விளக்கமளித்தும், ஏற்கனவே இப்படி தலைமை நீதிபதி கூறிவிட்டதாக சர்ச்சை வெடித்தது.

நீதிபதியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அரசியல் வர்ணனையாளராக இருக்கும் அபிஜீத் தீப்கே என்பவர் தனது எக்ஸ் தளத்தில் “அனைத்து கரப்பான் பூச்சி எல்லாம் ஒன்று சேர்ந்தால் என்னவாகும்” என பதிவிடிருந்தார்.

கடந்த 16ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. இந்திய இளைஞர்கள் பலரும் இந்தப் பக்கத்தில் குவிந்து கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். “கரப்பான்பூச்சிகளை அழிப்பது அவ்வளவு எளிதல்ல.. அதுபோலத்தான் நாங்கள்..” என்று அவர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் மஹூவா மெய்த்ரா, கீர்த்தி அசாத் போன்றவர்களும் இணைந்திருப்பதுதான் இந்த சம்பவத்தின் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.

இந்த கட்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்த்ப்படாமலேயே பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு, கட்சித்தவும் எம்.எல்.ஏ எம்பிக்கள் 20 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை போன்ற பல வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு எதிர்கட்சியாக ‘தேசிய ஒட்டுண்ணி முன்னணி’ என்கிற தளமும் தொடங்கப்பட்டுள்ளது என்பதுதான். இனி என்னவெல்லாம் நடக்கப்பாேகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.