நுவரெலியாவில் கடும் மூடுபணி; சாரதிகள் அவதானம்
நுவரெலியாவில் பல்வேறு இடங்களில் இன்று (23) பிற்பகல் நேரத்தில் கடும் மூடுபணி நிலவியது குறிப்பாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு வீதிகளில் பனிமூட்டம் நிலவியுள்ளது.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் நுவரெலியா பிரதான நகரில் மிதமான மழை இடைக்கிடையே கொட்டி தீர்த்து வருகின்றது.
நகருக்குள் நுழையக்கூடிய பிரதான பிரதான வீதிகள் அனைத்திலுமே கடுமையான பனிமூட்டம் நிலவி வருகின்றது. இதனால் எதிரே வரக்கூடிய வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு இந்த கடுமையான பனிமூட்டம் நிலவி வருகின்றது.
தொடர்ந்து கடுமையான பனிமூட்டத்துடன் சேர்ந்து கடும் குளிரும் நிலவி வருவதால் பொது மக்கள் மற்றும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தங்களுடைய இயல்பு வாழ்கை முற்றிலுமாக முடக்கப்பட்டிருக்கின்றது எனவும் தெரிவிக்கிறனர்