;
Athirady Tamil News

சந்தேக நபர்கள் இருவர் போதைப் பொருளுடன் கைது-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம்

0

இரு வேறு இடங்களில் நீண்ட காலமாக போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த சந்தேக நபர்களை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட புறநகர் பகுதியில் நீண்ட காலமாக போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது.

குறித்த தகவலுக்கமைய சனிக்கிழமை(23) மாலை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்.இந்திக தலைமையிலான பொலிசார் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது சாய்ந்தமருது-14 பிரிவில் வதியும் சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருள் 2220 மில்லி கிராம் உட்பட போதைப் பொருளை விற்று பெறப்பட்ட ஒரு தொகுதி பணத்துடன் கைதானார்.இதே வேளை மற்றுமொரு சந்தேக நபர் மாவடி பகுதியில் வைத்து கைதானார்.அச்சந்தேக நபர் வசம் இருந்து ஹெரோயின் 2300 மில்லி கிராம் உட்பட ஐஸ் போதைப் பொருள் 60 மில்லிகிராம் பக்கேற் 2 உம் விற்பனைக்கு தயாராக வைத்திருந்த நிலையில் மீட்கப்ட்டது.அத்துடன் இச்சந்தேக நபர்களிடம் இருந்து ஒரு தொகுதி பணமும் மீட்கப்பட்டது.மேற்குறித்த பணம் போதைப்பொருள் விற்பனையில் சம்பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணையில் குறிப்பிட்டனர்.

மேலும் இச்சோதனை நடவடிக்கையானது கிழக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் பணிப்புரைக்கமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி நெறிப்படுத்தலில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசார் வழிகாட்டுதலின் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்.இந்திக தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

மேலும் இவ்விடயம் குறித்து சட்ட நடவடிக்கைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.