;
Athirady Tamil News

இரண்டாவது திருமணம்;மனைவி மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த கணவன்

0

தனது மனைவியின் உடலில் பெற்றோல் ஊற்றி தீ வைத்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர் மீகஹவத்த, அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபராவார்.

கடந்த 18 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் மூச்சக்கர வண்டி ஒன்றில் வந்த அவர், பெண்ணின் தலையில் பெற்றோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

பலத்த தீக்காயமடைந்த பெண் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தற்போது வரை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது முகம் மற்றும் மார்புப் பகுதிகளில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முதற்கட்ட விசாரணைகளில், பெண்ணின் சட்டபூர்வ கணவரே தீ வைத்தமை தெரியவந்துள்ளது.

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இன்று (22) முல்லேரியா பொலிஸ் பிரிவில் வைத்து சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், இக்குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பெற்றோல் போத்தலும் முச்சக்கரவண்டியும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.தீ வைத்தது தனது சொந்த மனைவிக்கே என சந்தேக நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இருவரும் தங்களது முந்தைய திருமணங்களிலிருந்து சட்டபூர்வமாக விவாகரத்து பெற்ற பின்னரே, ஒருவரைக்கொருவர் திருமணம் செய்து கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், தனது மனைவி பல்வேறு நபர்களுடன் பழகியதாகவும், பல நாட்களாக வீட்டிற்கு வராமல் இருந்ததாகவும் சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தீ வைத்த பின்னர் தானும் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக சந்தேக நபர் பெண்ணிடம் கூறியிருந்தமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இதற்கு முன்னர் எந்தவொரு குற்றச்செயலிலும் அல்லது குற்றச்சாட்டிலும் சிக்காத, முச்சக்கரவண்டி ஓட்டுநராகப் பணியாற்றிய ஒருவர் என பிரதேசவாசிகள் தெரிவித்ததாக பொலிஸார் மேலும் கூறினர்.

சந்தேக நபர் இன்று (24) புதுக்கடை இலக்கம் 08 நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.