;
Athirady Tamil News

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அதிநவீன ‘ஸ்டார்ஷிப்’ ராக்கெட் சோதனை வெற்றி

0

வாஷிங்டன்,

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம், நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப ‘ஸ்டார்ஷிப்’ என்ற பிரமாண்ட ராக்கெட்டை தயாரித்து வருகிறது. 40 அடுக்கு மாடி உயரமுள்ள இந்த அதிநவீன ராக்கெட்டின் 12-வது சோதனை ஓட்டம், டெக்சாஸ் மாகாணத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

விண்ணில் பாய்ந்த இந்த ராக்கெட், திட்டமிட்டபடி போலி செயற்கைக்கோள் களை விண்வெளியில் நிலைநிறுத்தியது. பின்னர், கடலில் விழுந்து தீப்பந்தாக வெடித்துச் சிதறியது. இந்த வெற்றிக்காக எலான் மஸ்க் சுமார் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்துள்ளார். முன்னதாக நடந்த பல சோதனைகள் நடுவானிலேயே வெடித்துச் சிதறி தோல்வியில் முடிந்தன. இதையடுத்து என்ஜின்களை மேம்படுத்தி இம்முறை வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆய்வு மையம், வருகிற 2028-ம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட்டைத்தான் பயன்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது. சீனா 2030-க்குள் நிலவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்குப் போட்டியாக எலான் மஸ்க் இந்த சோதனையை நிகழ்த்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.