;
Athirady Tamil News

இவான்கா ட்ரம்பைக் கொல்ல சதி;ஈராக் இளைஞர் மீது குற்றச்சாட்டு

0

ஈரான் முன்னாள் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்பைக் கொல்ல சதி திட்டம் தீட்டியதாக ஈராக் இளைஞர் முகமது பாகெர் சாத் தாவூத் அல்-சாதி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அவரிடம் இவான்கா ட்ரம்பின் புளோரிடா இல்லத்தின் வரைபடம் மற்றும் இவான்கா, ஜாரெட் குஷ்னர் தங்கியிருந்த பகுதியின் புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உங்களது பாதுகாப்பு உங்களை காப்பாற்றாது” என மிரட்டல் பதிவுகளையும் அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

துருக்கியில் கைதுசெய்யப்பட்ட அவர் பின்னர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதுடன், பல தாக்குதல் மற்றும் தாக்குதல் முயற்சிகள் தொடர்பில் அமெரிக்க நீதித்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.