முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச அதிரடியாக கைது
நீதிமன்றம் அழைத்துசெல்லப்பட்ட விமல் வீரவங்ச ..
தலங்கம பொலிஸாரினால் இன்று (25) முற்பகல் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, சற்றுமுன் பொலிஸ் நிலையத்தில் இருந்து நீதிமன்றம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதன்படி, அவரை கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்தரமுல்லையில் உள்ள இராணுவ நினைவிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராணுவ வெற்றி கொண்டாட்டத்திற்கான ஒத்திகை நிகழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்றைய தினம் தலங்கம பொலிஸ் நிலையத்தில் அவர் முன்னிலையானார். இந்நிலையில் வாக்குமூலம் வழங்கலின் பின்னர் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
போர்வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகையை குழப்ப முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற இராணுவ வெற்றி தின நிகழ்வுக்கான ஒத்திகை நிகழ்வுக்கு தடையேற்படுத்திய சம்பவம் தொடர்பான வாக்குமூலத்தை வழங்க விமல் வீரவங்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் இன்று (25) முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை கொழும்பு சம்பவம் தொடர்பில் இந்த அரசாங்கம் திங்கட்கிழமை தன்னை கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.