;
Athirady Tamil News

எரிபொருள் விலை மாற்றங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

0

எதிர்காலத்தில் எரிபொருள் விலையில் பெரிய அளவிலான அதிகரிப்பையோ அல்லது குறைப்பையோ எதிர்பார்க்க முடியாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் மொத்த முனையங்கள் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஜூலை மாத இறுதி வரை போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த மாதத்தின் 28 மற்றும் 31 ஆம் திகதிகளில் மேலும் இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் நாட்டிற்கு வரவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறை
எரிபொருள் விலைகள் குறையக்கூடும் என்ற சில வதந்திகளைத் தொடர்ந்து, பலரும் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வருகை தருவதாகக் குறிப்பிட்ட மயூர நெத்திகுமாரகே, இதுவரையில் விலை குறைப்புத் தொடர்பான எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை எதுவும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.